Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை

புரட்டாதி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த விசாரணைகளின் ஒருகட்டமாக, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பொறுப்பேற்றுள்ளது.

பாராளுமன்ற அதிகாரிகளால் இந்த ஆவணங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் சபாநாயகரின் தனிப்பட்ட பணியாளர்களின் விபரங்கள், அவர்களின் சம்பள விபரங்கள் மற்றும் வாகன பயன்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் இந்த முறைப்பாடு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், சபாநாயகர் அந்த விவாதத்துக்கு தலைமை தாங்குவதோ அல்லது குறித்த சட்டமூலத்தை சான்றளித்து கையொப்பமிடுவதோ பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யால தேசிய பூங்காவின் சுற்றுலா பயணிகளுக்கான அறிவிப்பு

ஆவணி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

திபெத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பியால் அண்ணன் வெட்டிக்கொலை!

புரட்டாதி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube