Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த மொரகொல்ல தோட்டப் பகுதி வீடமைபுத் திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிகள் நாளை ஆரம்பம்

புரட்டாதி 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

பதுளை மாவட்டம், ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மொரகொல்ல தோட்டப் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நாளை (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

இதன் மூலம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் 54 குடும்பங்களின் சொந்த வீட்டுக்கான எதிர்பார்ப்பு பூர்த்தியாகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 54 குடும்பங்களுக்காக அப்போதைய அரசாங்கங்களினால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பயனாளிகளே வீடுகளைக் கட்டிக் கொள்ளும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பண நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டிருந்தது. இதனால், 2025 ஆம் ஆண்டு வரை ஒரு வீடு கூட முழுமையடையாமல், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் வழிகாட்டலில், ‘மலையக மகிழ்ச்சி’ திட்டத்தின் கீழ் 2025 ஒக்டோபர் 13 அன்று இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது முதற்கட்டமாக, ஒரு வீட்டிற்கு 32 இலட்சம் ரூபா செலவில் 24 வீடுகளின் நிர்மாணப் பணிகள் இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளன.

புதன்கிழமை(16)ஆரம்பமாகும் இரண்டாம் கட்டத்தின் கீழ், சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுப் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட எஞ்சிய 30 வீடுகளும் புனரமைக்கப்படவுள்ளன. பாதைகள், தடுப்புச் சுவர்கள் மற்றும் வடிகாலமைப்புகளை அமைக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவைப் படையணி நேரடிச் சிரமதானப் பங்களிப்பை வழங்கவுள்ளது.

வீடமைப்புப் பணிகளுக்கு மேலதிகமாக மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 9.9 மில்லியன் ரூபா செலவில் புதிய நீர் விநியோகத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பதுளை மாவட்ட செயலகம் மற்றும் ஹாலிஎல பிரதேச செயலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இடம்பெறும் இத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்ய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதி கோரி கித்துள் சந்தியில் போராட்டம்!

ஆனி 23, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய மீனவர்கள் 30 பேர் விடுதலை!

ஆனி 3, 2026
இலங்கைவானிலை

பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube