நிலவின் மேற்பரப்பில் 222 மீட்டர் அகலம் கொண்ட புதிய விண்கல் பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி Research அமைப்பான நாசா கண்டுபிடித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் விண்கல் ஒன்று நிலவின் மீது மோதியதன் காரணமாகவே இந்தப் பள்ளம் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற மிகப்பெரிய விண்கல் தாக்கங்கள் ஒரு நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய மிக அரிய நிகழ்வாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிலவில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த விண்கல் பள்ளத்திற்கு ‘McGetchin’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
