Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் தண்டனை விவகாரம் – தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

புரட்டாதி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க அல்லது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சி செய்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அரசாங்கத்துடன் ஏற்கனவே பல கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், சிவராசா அனோஜனுக்குத் தேவையான சட்டத்தரணி உதவியை வழங்குவதற்குத் தூதரகம் தலையிட்டுள்ளதாகவும், இச்செயற்பாடுகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் சவூதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் 96 வது கல்லூரி தினத்தை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை உணவகத்தை அகற்ற இடைக்காலத் தடை

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube