Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி அரசரிடம் எழுத்துமூல கோரிக்கை – ஜனாதிபதி

#அனோஜன் #பொதுமன்னிப்பு #சவூதி_அரசர் #ஜனாதிபதி #மன்னிப்பு_கோரிக்கை #SaudiArabia #SriLanka #Anokan #Pardon #President

புரட்டாதி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை கவனமுடன் செவிமடித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சும் சிவராசா அனோஜன் தொடர்பான சம்பவம் குறித்து சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதுடன், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகள் ஊடாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது கூறியுள்ளார்.

சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் சிவராசா அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவல் தீவிரம்: நோயாளிகள் 50,000-ஐ கடந்த நிலையில் அவசர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினக்கல் துறையை மேம்படுத்த நிறுவனங்கள் இரண்டை ஒன்றிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

புரட்டாதி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் மெனின்ஜைடிஸ் மூளைக்காய்ச்சல் நோய்!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube