அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் மூன்று முக்கிய செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகை அணுகலைத் தடை செய்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஊடக சுதந்திரம் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.
ட்ரம்ப், இந்த ஊடகங்கள் தனது நிர்வாகம் தொடர்பாக “போலி செய்திகள்” வெளியிட்டதாக குற்றம்சாட்டி, அவற்றின் White House press credentials ஐ ரத்து செய்தார். செப்டம்பர் 19 முதல் அந்த நிறுவனங்களின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கு எதிராக குறித்த மூன்று முக்கிய செய்தி நிறுவனங்களும் இணைந்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
தங்களது செய்தியாளர்களை ஊடகச் செய்திகளின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தடை செய்திருப்பது அமெரிக்க அரசியலமைப்பின் First Amendment உரிமைகளை மீறுவதாக அந்த நிறுவனங்கள் வாதிட்டுள்ளன.
இதற்கிடையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் White House press pool, ஜனாதிபதியின் சில அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கான பகிரப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதனால் வெள்ளை மாளிகைக்கும் அமெரிக்க ஊடகங்களுக்கும் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திலும் விசாரணைக்கு சென்றுள்ளதால், ஊடக அணுகல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான முக்கிய சட்டப் போராட்டமாக இது மாறியுள்ளது.
