Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

20 ஆண்டு மருத்துவப் பணியை கைவிட்டு ‘பன்’ கடையால் பிரசித்தமான சீன வைத்தியர்

#சீனவைத்தியர் #மருத்துவப்பணி #பன்கடை #புதியதொழில் #சீனா #வைத்தியர் #தொழில்மாற்றம் #ChineseDoctor #MedicalCareer #BakeryBusiness #CareerChange #China

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, சீனாவைச் சேர்ந்த 48 வயது பெண் மருத்துவர் ஒருவர் தனது 20 ஆண்டுகால மருத்துவப் பணியை கைவிட்டு, ஆவி வேகவைத்த பன் கடையைத் தொடங்கியுள்ளார்.

சீனாவின் வூஹான் மாகாணத்தைச் சேர்ந்தவர் டாங் மின். இவர் மகளிர் மருத்துவ நிபுணராக, கடந்த 1999-ம் ஆண்டு முதல் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதையும் தாண்டி, மருத்துவம் சாரா பிற நிர்வாகப் பணிகள் மற்றும் தணிக்கை சோதனைகள் காரணமாக கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார்.

கடந்த 2023-ம் ஆண்டு தனது மருத்துவ பதவியைத் துறந்த டாங் மின், வூஹான் நகரில் பாரம்பரிய பன் கடை ஒன்றை ஆரம்பித்தார். உணவுத் துறையில் நிலவும் கடும் போட்டிகளுக்கு இடையேயும், அவரது கடை குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது.

வியாபாரம் சிறப்பாக நடந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதத்தில் தனது 2-வது கிளையையும் அவர் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து டாங் மின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மருத்துவராக இருந்தபோது வேலையை விட்டுவிடலாம் என்ற எண்ணம் தினமும் தோன்றும். இப்போது பன் கடை நடத்துவது உடல் ரீதியாக சோர்வைத் தந்தாலும், மன ரீதியாக எனக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகிறது” என குறிப்பிட்டார்.

அதிக வருமானம் தரும் கவுரவமான பணியை விட மன ஆரோக்கியமே முக்கியம் என நிரூபித்துள்ள இவரது இந்த முடிவு, உலகளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் மாடுகள் கடத்தல் – இருவர் கைது

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வத்தளை, ஹுனுப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை!

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube