Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இரவு இந்தியாவிற்குள் நுழையும் ஆழமான தாழமுக்கம்!

#ஆழமானதாழமுக்கம் #வானிலை #இந்தியா #காலநிலை #வானிலைஎச்சரிக்கை #DeepDepression #IndiaWeather #WeatherAlert #CycloneAlert #RainAlert #WeatherNews #IndiaNews

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் இந்தியாவின் வடக்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழமான தாழமுக்கத்தால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்றபோதிலும், அமைப்பை நோக்கி வீசும் காற்று ஓட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழைக்கால வானிலை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம் இந்தத் தகவலை அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

ஆடி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கோய் மீன்களுக்குப் பாலியல் தொல்லை

புரட்டாதி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எலிக்காய்ச்சல் அபாயம் அதிகரிப்பு; மக்கள் அவதானமாக இருக்க அறிவுரை!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுபோவில மருத்துவமனையில் புதிய நவீன சிகிச்சை மையங்கள் திறப்பு!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube