Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்ப் தடை விதித்த ஊடக நிறுவனங்களுக்கு மீண்டும் வெள்ளை மாளிகைக்கான அணுகலை வழங்க உத்தரவு

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்திருந்த CNN, MS NOW மற்றும் Politico ஆகிய மூன்று ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகைக்கான அணுகலை மீண்டும் வழங்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்திற்கான மாவட்ட நீதிபதி திமொத்தி கெல்லி பிறப்பித்துள்ள தற்காலிக உத்தரவின்படி, குறித்த மூன்று ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கான ஊடக அனுமதிச்சீட்டுகளை உடனடியாக மீள வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி ட்ரம்ப் நிர்வாகம் குறித்த மூன்று ஊடக நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகைக்கான அணுகலைத் தடை செய்திருந்தது. இதனை எதிர்த்து CNN, MS NOW மற்றும் Politico ஆகிய மூன்று ஊடகங்களும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.

இந்த ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கான அணுகலைத் தடை செய்வதற்கு முன்னர், உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் தங்களது தரப்பை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என வழக்கில் வாதிடப்பட்டது.

மறுபுறம், ட்ரம்ப் நிர்வாகம் குறித்த ஊடக நிறுவனங்களின் செய்தி வெளியீடுகள் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்ததுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.

எவ்வாறாயினும், தற்காலிகமாக அணுகலை மீள வழங்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டிரான் அலஸ் உள்ளிட்டோரை கைது செய்யத் தடை

ஐப்பசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பளையில் மரம் முறிவு: போக்குவரத்து பாதிப்பு!

ஆனி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு கண்டுபிடிப்பு

புரட்டாதி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசு அவதானம்

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube