பிலியந்தலை, போகுந்தர பகுதியில் சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாண வட குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், போகுந்தர பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 11 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 30 கோடி ரூபா என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
