Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான தண்டனையை அமுல்படுத்துமாறு சட்ட மாஅதிபர் மனு

#ஞானசாரதேரர் #சட்டமாஅதிபர் #தண்டனை #நீதிமன்றம் #சட்டநடவடிக்கை #மனுத்தாக்கல் #இலங்கைசெய்திகள் #SriLankaNews #BreakingNews

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு உத்தரவிடக்கோரி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.

 

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு புறம்பானது மற்றும் செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் கடந்த 10 ஆம் திகதி தீர்ப்பளித்துள்ளது.

 

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட பல தரப்பினர், முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற அனுமதியின்றி உரையாற்றியமை மற்றும் இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டமை மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரருக்கு எதிராக அன்றைய ஹோமாகம நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்தார்.

 

அந்த முறைப்பாட்டை விசாரணை செய்த அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் குழாம், 2018ஆம் ஆண்டு மே 24 ஆம் திகதி ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்து, 6 ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில் 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பின் அடிப்படையில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

உச்சகம் கொடுக்கும் சூரியன் – பகல்வேளையில் வெப்பப் எச்சரிக்கை மட்டத்தை எட்டும்

ஆவணி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பில் முறைப்பாடு

ஐப்பசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று!

ஆனி 5, 2026
இலங்கைவிளையாட்டு

பிரபாத் இல்லாமல் இலங்கை டெஸ்ட் அணியை அறிவித்தது!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube