Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்ளூராட்சி, பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயப்படுத்த திட்டம்

புரட்டாதி 30, 2026
படிக்க 3 நிமிடங்கள்

 

மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் “உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் தேசிய கட்டமைப்பு” தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றமொன்றினால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துப் பணிகளையும் இனங்கண்டு, அவற்றில் டிஜிட்டல் கட்டமைப்புக்குள் உள்ளடக்கக்கூடிய மற்றும் உள்ளடக்க முடியாத சேவைகள் எவை என வேறுபடுத்திக் கொள்ளுமாறும், தற்போதுள்ள கட்டமைப்புகளினால் அந்த அனைத்து சேவைகளும் உள்ளடக்கப்படுகின்றதா என்பதை கண்டறியுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

பல்வேறு நிறுவனங்களால் தனித்தனியாகச் செயற்படுத்தப்படும் வெவ்வேறான கட்டமைப்புகளுக்குப் பதிலாக, முழுமையான அரச சேவையையும் உள்ளடக்கும் வகையில் ஒரு தேசியக் கட்டமைப்பை ஸ்தாபிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அந்தப் பணிகளின் போது பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள கட்டமைப்புகளில் காணப்படும் குறைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொண்டு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் பணிகளை செயற்திறனுடன் ஒருங்கிணைப்பதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி இங்கு பணிப்புரை விடுத்தார்.

உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற வரி செலுத்துதல்கள், பொது வருமானங்கள் (விளம்பரப் பலகைக் கட்டணங்கள், விளையாட்டரங்குகள் மற்றும் பொது மண்டபங்களை முன்பதிவு செய்தல்), விற்பனை நிலைய வாடகைகள், நீர் கட்டணங்கள் மற்றும் பல்வேறு அனுமதிப் பத்திரங்கள்/உரிமங்களைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வழிமுறைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக GovPay போன்ற கட்டமைப்புகளை இதன் மூலம் மேலும் மேம்படுத்திக் கொள்ளக்கூடிய முறைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டமயமாக்கல் செயற்பாடு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் 300க்கும் மேற்பட்ட சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு முதல் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டம் வரை சேவைகளை வலையமைக்கும் செயற்பாட்டின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

தற்போது பொலன்னறுவை மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டமயமாக்கல் செயற்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், நெல் கொள்முதல் மற்றும் டித்வா அனர்த்த நிவாரணம் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பான வெற்றியும் அனுபவங்களும் கலந்துரையாடலிற்கு உட்படுத்தப்பட்டன.

பிரதேச செயலக டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தொகுதியாக (Module) அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், அரச அதிகாரிகள் நியமனம் பெற்ற நாள் முதல் ஓய்வுபெறும் காலம் வரை உள்ள முழுமையான செயற்பாடுகளையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் “GovHR” டிஜிட்டல் கட்டமைப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலில் மிதக்கும் வெற்று கொள்கலன்கள்!

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மாலுமிகளை விடுவிக்க ஈரான் இணக்கம்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து நியாயமற்றது

ஆவணி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube