Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

#மட்டக்களப்பு #கொக்கட்டிச்சோலை #கொலைவழக்கு #பெண்கள்கடத்தல் #கொள்ளை #மயக்கமருந்து #பொலிஸ் #நீதிமன்றம் #விளக்கமறியல் #SriLanka #Batticaloa #BreakingNews #CrimeNews #SriLankaNews

புரட்டாதி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவன், அவரது மனைவி மற்றும் கணவனின் சகோதரர் ஆகிய மூவரே இவ்வாறு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், மற்றொரு இளம் தாயும் அவரது மூன்று வயது நான்கு மாத குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பெண்களுக்கு மயக்க மாத்திரைகள் கலந்த பழச்சாறு வழங்கி அவர்களை கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாகவும், சிலரை கொலை செய்து கிணற்றில் வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு முச்சக்கரவண்டிகள், கார் ஒன்று, கூரிய ஆயுதங்கள், மயக்க மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஸ்பிரே உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதான சந்தேகநபர்களான கணவன், மனைவி மற்றும் கணவனின் சகோதரர் ஆகிய மூவருக்கு எதிராக பெண்களை மயக்கமடையச் செய்து கொள்ளையிட்டமை, பெண்ணொருவரை கடத்தி கொலை செய்தமை மற்றும் இளம் தாயை குழந்தையுடன் கடத்திச் சென்று கொள்ளையிட்டு கிணற்றில் வீசியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், மூவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

ஆவணி 3, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்திய மகளிர் அணி சாதனை: பிரதமர் மோடி-குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!

புரட்டாதி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் ஆண்களிடையே அதிகரிக்கும் HIV தொற்று

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விலங்கு பாதுகாப்பு சட்டத்தினால் கண்டி எசல பெரஹராவிற்கு எந்த தடையும் இல்லை!

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube