Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் 684 அபிவிருத்தி திட்டங்கள்!

ஐப்பசி 2, 2026
படிக்க 2 நிமிடங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று (01) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாளி சமரசிங்க மற்றும் இணைத் தலைவரும் வட மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

2026ஆம் ஆண்டிற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 684 அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதோடு, இதற்காக ரூபா 8,431.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் ரூபா 1,620.7 மில்லியனும், மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் 300 திட்டங்களுக்காக ரூபா 1,648.1 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காகவும் நிதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இத்திட்டங்கள் அனைத்தும் நடப்பாண்டு நிறைவடைவதற்குள் முடிவடைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘டிட்வா’ புயலினால் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட 1,121 குடும்பங்களுக்கு, குடும்பமொன்றிற்கு ரூபா 5 மில்லியன் வீதம் வழங்கப்படும் வீட்டு நஷ்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், சேதமடைந்த 10 குளங்களை சீரமைத்தல் மற்றும் ‘வாரி மஹிமய – அபே உருமய’ (நீர்ப்பாசனப் பெருமை – நமது பாரம்பரியம்) உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களின் திறனை மேலும் அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இவற்றுடன், கிராமப்புறப் பாலங்கள் மற்றும் 55 வீதிகளை அ

மைப்பதற்கும் நவீனமயமாக்குவதற்கும் ரூபா 852.7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘பிரஜாசக்தி – ஆயிரம் கிராமங்கள், ஆயிரம் பணிகள்’ திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் 136 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்காக ரூபா 363.87 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகவும் முறைமையாகவும் செயல்படுத்துதல், ஒதுக்கப்பட்ட நிதியைச் திறம்படப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களை நிறைவு செய்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ். திலகநாதன் உள்ளிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகாந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொரளை – மருதானை வீதியில் போக்குவரத்து நெரிசல்

ஐப்பசி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பணம் பறிப்பு!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்களுக்குள் தலையில முண்டமான என்புகூடுகள் அடையாளம்

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube