நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் இன்று (07) காலை இடம்பெற்ற சைக்கிள் விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் ஜெயராம் போல் ராஜ் என்ற மாணவன் சைக்கிளில் பயணித்தபோது, லக்சபான – ஹட்டன் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தண்டுகலா தோட்டம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த மாணவனின் சடலம் டிக்கோயா–கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
