இலங்கையில் காசநோயாளிகளுக்கான சிகிச்சையை தொடர்ந்து வழங்குவதற்கு உதவும் வகையில், இந்திய அரசாங்கம் 52 மில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய காசநோய் மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
சுமார் 3 தொன் எடையுள்ள இந்த மருந்துத் தொகுப்பில் 15 இலட்சத்திற்கும் அதிகமான மாத்திரைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, குறித்த மருந்துகளை இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
