Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியைக்கு நீதி கோரியும் பாடசாலை மாணவர்கள்; ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோரி வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்றது

நீதிக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது

இதன்போது குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கனரக வாகனங்களின் கட்டுபாடற்ற போக்குவரத்தை நிறுத்து மனித உயிர்களை காப்பாற்று, உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருக்காதே இப்போதே நடவடிக்கை எடு.

பாதுகாப்பற்ற போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து, உயிரை காப்பது அரசின் கடமை பாதுகாப்பை உறுதிப்படுத்து. மாணவர்கள் செல்லும் பாதையில் மரண வாகனங்கள் வேண்டாம், அதிகாரிகளே மக்களின் குரலை செவிமடுங்கள், மக்களின் உயிருடன் விளையாடாதே, உயிரிழந்த ஆசிரியை மதிவதனிக்கு நீதி வேண்டும். சட்டவிரோத மண் அகழ்வை உடன் நிறுத்து என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோருதல் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசத்தில் மணல் அகழ்வு நடவடிக்கைகளையும் கனரக வாகனப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எனும் தலைப்பிலான மகஜர் ஒன்றை வவுணதீவு பிரதேச செயலாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – 44 எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து!

அக்டோபர் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலை

ஏப்ரல் 29, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை சூடு பிடித்தது: கைது அச்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மூத்த DIG வருண ஜெயசுந்தர!

ஜூன் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக மஹிந்தவுக்கு அழைப்பாணை!

மே 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube