ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வீரர்களின் இரண்டாவது குழு நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இலங்கை வீரர்கள் சர்வதேச அரங்கில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக இந்தப் போட்டிகள் அமையவுள்ளன.
