இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் தேசிய விளையாட்டு சங்கப் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருத்தப்பட்ட யாப்புக்கு இணங்க புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படும் வரை, குறித்த சங்கத்தின் செயற்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
