Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்குத் திரும்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமான சேவை மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளது.

லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 777-200ER ரக விமானம், இன்று (24) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸின் இலங்கைக்கான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் வகையில், லண்டன் கேட்விக் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, குறிப்பாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நாட்டின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், வணிகப் பயணங்கள் மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இந்தச் சேவை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான அட்வான்டிஸ் ஏவியேஷன் சர்வீசஸ் (Advantis Aviation Services), பிரிட்டிஷ் ஏர்வேஸின் இலங்கைக்கான பொது விற்பனை முகவராகச் செயற்படவுள்ளது.

குறித்த விமான சேவை 2026/2027 குளிர்கால கால அட்டவணையின் கீழ் பருவகால சேவையாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பொருளாதார வகுப்பு, பிரீமியம் பொருளாதார வகுப்பு மற்றும் வணிக வகுப்பு ஆகிய பயண வசதிகளையும் பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தச் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டமை, இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தும்பர சிறைச்சாலையில் கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு

ஆகஸ்ட் 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனா- திபெத் விவகாரம் எங்கள் பிரச்சினை- 3வது நாடு தலையிடக் கூடாது என சீனா திட்டவட்டம்

ஜூலை 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு துப்பாகிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

அக்டோபர் 18, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கட்டார் முன்னாள் மன்னரின் இழப்பிற்கு ஜனாதிபதி இரங்கல்!

ஜூலை 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube