களுத்துறை ரயில் நிலையத்திற்குப் பின்னால் அமைந்துள்ள கடற்கரையில், சுமார் 50 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடலில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவரது சடலம் கரையொதுங்கியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
