கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்திய வெளிநாட்டு குடியுரிமையாளர் அட்டை (OCI), கடவுச்சீட்டு, சான்றிதழ் உறுதிப்படுத்தல் உள்ளிட்ட தூதரக சேவைகளை வழங்குவதற்காக திருகோணமலையில் சிறப்பு முகாமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முகாம் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு, தூதரக அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த தூதரக சேவைகள் தேவைப்படும் மக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் முகாமுக்குச் சென்று பயன்பெற முடியும்.
