Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டயகம ஈஸ்ட் வீதியைப் புனரமைக்கக் கோரி மக்கள் போராட்டம்!

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டயகம ஈஸ்ட் பகுதிக்குச் செல்லும் வீதியைப் புனரமைக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் இன்று (26) வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

May be an image of one or more people and text

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு, அத்துடன் இம்மாதம் 20ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குறித்த வீதியின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

May be an image of one or more people and text

தற்போது வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன், முச்சக்கர வண்டிகள் மாத்திரமே சில பகுதிகளினூடாகப் பயணிக்கக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். வீதியில் அடிக்கடி விபத்துகள் இடம்பெற்று பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

May be an image of one or more people and text

இந்த வீதியைப் பயன்படுத்தும் கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, நிறைமாதக் கர்ப்பிணிகள் மற்றும் தீவிர நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

May be an image of train and road

வீதியை உடனடியாகப் புனரமைக்குமாறு வலியுறுத்தி, சாரதிகள், தோட்டத் தொழிலாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

No photo description available.

இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

“எமது வீதியைப் புனரமைக்காமல் எந்தவொரு அரசியல்வாதியும் வாக்குக் கேட்டு வரக்கூடாது” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துங்கள் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

அக்டோபர் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அகில விராஜ் கரியவசம் கைது

ஆகஸ்ட் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மேலும் 3 சீனர்கள் கைது

மே 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடல் அலை உயர்வு தொடர்பில் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube