குருநாகல் – நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 8 பேர் அடங்கிய குழுவினர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
நீரில் மூழ்கியவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் உடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீராடச் சென்ற குழுவில் மேலும் 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கிய நிலையில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன 6 பேரையும் கண்டுபிடிப்பதற்காக பிரதேச மக்களும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
