பொலிஸ் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பொறுப்பதிகாரி உட்பட ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
