Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புயலின் தாக்கம் குறைகிறது; பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

#வானிலைஅறிவிப்பு #ஒர்னாப் #புயல் #மழைஎச்சரிக்கை #இலங்கை #வளிமண்டலவியல்திணைக்களம் #பலத்தகாற்று #இடியுடன்மழை #SriLankaWeather #WeatherAlert #SriLankaNews #TamilNews

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ள “ஒர்னாப்” (Arnab) புயலின் தாக்கம் இலங்கையின் வானிலையில் படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மே 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சீனிக்கு தடை விதிக்க முன்மொழிவு!

அக்டோபர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் 280 மில்லியன் டொலர் திட்டம் கைவிடப்பட்டது!

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய அரசியலமைப்பு கட்டாயம் உருவாக்கப்படும் – ஹர்ஷன நாணயக்கார

செப்டம்பர் 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube