நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 86 ஆம் இலக்க கட்டளையை மீறி, நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகம் செய்யத் தவறியதாகக் கூறி, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிறுவனத்திற்கு அழைப்பாணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
