உலகின் மிகப்பெரிய கிரிப்டோ வர்த்தகத் தளமான பைனான்ஸில் இருந்து 6.3 பில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு வடகொரிய ஹேக்கர்கள் காரணமாக இருக்கலாம் என பகுப்பாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து கிரிப்டோ நாணயங்களின் விலைகள் சரிந்துள்ளதுடன், பணம் மீளப்பெறும் சேவையையும் பைனான்ஸ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பயனர்களின் இழப்புகளை முழுமையாக ஈடுசெய்வதாக பைனான்ஸ் அறிவித்துள்ளது.
