முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு மற்றும் கம்பஹா மாவட்டம் சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகளைக் கண்டறிதல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
முத்துராஜவெல சதுப்புநிலப் பகுதிகள், பமுனுகம கடற்கரை பகுதிகளில் சூழல் மாசடைதல் மற்றும் சீதுவ லியனகேமுல்ல தொழிற்சாலைகள் சார்ந்த சிக்கல்கள் ஆகியவை தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி, இப்பகுதிகளில் இடம்பெறும் சூழல் மாசடைதலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
குறித்த சுற்றாடல் பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய குழுக்களை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
