வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 236 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 97 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 32 பேர் கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், ஏனையவர்கள் போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
