Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 மாவட்டங்களின் பலப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Heavy Rain | Land Slide Alert | 12 Districts | SriLanka | QuickTamilNews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இன்று (14) வியாழக்கிழமை மாலை 4:00 மணி முதல் நாளை (15) வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட எச்சரிக்கை (Level 2 – Amber Alert)

பின்வரும் மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:

காலி மாவட்டம்: நெலுவ

களுத்துறை மாவட்டம்: அகலவத்தை, பதுரலிய, மத்துகம, ஹொரனை, வலல்லாவிட்ட

குருநாகல் மாவட்டம்: அலவ்வ

இரத்தினபுரி மாவட்டம்: பெல்மடுல்ல, இரத்தினபுரி

முதலாம் கட்ட எச்சரிக்கை (Level 1 – Yellow Watch)

அதேவேளை, பின்வரும் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

கொழும்பு: சீதாவக்கை

கண்டி: பாதஹேவாஹெட்ட, பாஸ்பாகே கோரளை, அக்குரணை, கங்கவட்ட கோரளை, பான்வில, யடினுவர, கங்க இஹல கோரலே, உடபலாத்த, பூஜாபிட்டிய, தும்பனை, தெல்தொட்ட, தொலுவ, உடுனுவர, ஹதரலியத்த, ஹரிஸ்பத்துவ

நுவரெலியா: நோர்வூட், அம்பாகமுவ கோரளை, கொத்மலை மேற்கு

கேகாலை: மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தொட்டை, அரநாயக்க, கேகாலை, ரம்புக்கணை, வரக்காபொல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல

காலி: தவலம, எல்பிட்டிய, நியகம

களுத்துறை: இங்கிரிய, புலத்சிங்கள

மாத்தறை: பிட்டபெத்தர

மாத்தளை: நாவுல, அம்பன்கங்க கோரலே, ரத்தோட்ட

குருநாகல்: நாரம்மல, ரிதிகம

பதுளை: பண்டாரவளை, ஹாலி-எல, பசறை

மொனராகலை: வெல்லவாய, படல் கும்புர, பிபிலை

இரத்தினபுரி: எஹலியகொடை, குருவிட்ட, கலவானை, கொடகவெல்ல, கிரியெல்ல, அயகம

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி ஆவணங்களுடன் ஜீப் ரக வாகனம் ஒன்றை வைத்திருந்த 39 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ. நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube