Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது ‘மெயின் ஷிப் 6’ அதிநவீன சொகுசுக் கப்பல் !

மே 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘மெயின் ஷிப் 6’ என்ற அதிநவீன சொகுசு சுற்றுலாத் தூதுவராலயக் கப்பல், தனது கன்னிப் பயணமாக இன்று(21) நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த மாபெரும் சொகுசுக் கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக நங்கூரமிட்டுள்ளது.

இந்த ஆடம்பரக் கப்பலில் 2,380 சர்வதேச சுற்றுலாப் பயணிகளும், அவர்களுக்குச் சேவையாற்றுவதற்காக 951 அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, உள்நாட்டு சுற்றுலா நிறுவனங்கள் இணைந்து பாரம்பரிய கலாசார மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாக வரவேற்றன.

கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்பாக, இந்தச் சொகுசுக் கப்பல் கடந்த 19 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்குச் சென்றிருந்தது. தங்களின் தென்னிலங்கை விஜயத்தின் போது, இந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகள் யால, புந்தல மற்றும் உடவலவ ஆகிய தேசிய பூங்காக்களுக்குச் சென்று இலங்கையின் வனவிலங்கு வளங்களை ரசித்ததுடன், கதிர்காமம் வரலாற்றுப் புண்ணிய பூமி உள்ளிட்ட முக்கிய பண்பாட்டு அடையாளங்களையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சொகுசுக் கப்பலின் வருகையானது இலங்கையின் சுற்றுலாத்துறையின் எழுச்சிக்கு மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்.

செப்டம்பர் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வர்த்தகம், முதலீட்டு மேம்பாட்டுக்கு 200 மில்லியன் டொலர் கடன் : இலங்கை அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் புதிய ஒப்பந்தம்

ஆகஸ்ட் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இலங்கைக்கு எல்நினோ தாக்கம் குறைவாகவே காணப்படும்!

ஜூன் 14, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

காயம் காரணமாக அடில் ரசீத் போட்டியிலிருந்து முழுமையாக விலகல்!

செப்டம்பர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube