(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மட்டக்களப்பு நகரின் தனியார் போக்குவரத்து பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள், ஒரு இலத்திரனியல் கடை உட்பட அருகருகே இருந்த 3 கடைகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை (20) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது
நகரில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் பஸ் வண்டிகள் நிறுத்தும் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த இரு புடவைகடைகள் ஒரு இலத்திரணியல் கடை மற்றும் கைத்தொலைபேசி விற்பனை நிலையம் ஆகியவற்றின் பூட்டைஉடைத்து பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
