Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களு கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மே 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக, களு கங்கையின் தாழ்நிலப்பகுதியில் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை, மில்லகந்த ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புபுதுபாவில மற்றும் எல்லகாவ பகுதிகள் களு கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தைத் (Alert Level) தாண்டி, ஆபத்தான முறையில் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

இரத்தினபுரியிலும் களு கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்பட்ட போதிலும், தற்போது அங்கு நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து (Falling) வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – நாகலகம் வீதி பகுதியில் களனி கங்கையின் நீர்மட்டம் இன்னமும் எச்சரிக்கை மட்டத்திலேயே (Alert Level) நீடிக்கிறது.

எனினும், அங்கு நீர்மட்டம் தற்போது குறைந்து (Falling) வருகிறது. களனி கங்கையின் ஏனைய பகுதிகளான ஹன்வெல்ல, கிளன்கோர்ஸ், கிதுல்கல ஆகிய இடங்களில் நீர்மட்டம் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.

துனமலை பகுதியில் அத்தனகலு ஓயா இன்னமும் சிறிய அளவிலான வெள்ள மட்டத்திலேயே (Minor Flood) காணப்படுகிறது.

எவ்வாறாயினும், அங்கு நீர்மட்டம் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் பொது சந்தையில் ஏற்பட்ட பதற்றம்!

ஜூலை 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் – பரவிபாஞ்சான் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கள்ளச்சாராய உற்பத்தி பகுதி பொலிஸாரால் முற்றுகை!

மே 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பஸ் ஒன்றில் சிக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு!

ஜூலை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி!

செப்டம்பர் 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube