Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையில் 2,647 வெற்றிடங்கள்!

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீதித்துறையில் கடந்த 2018ஆம் ஆண்டின் பின்னர் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாமையினால் இதுவரை 2,647 வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவில் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட பொருத்தனை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள கட்டளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2026 ஜனவரி 5ஆம் திகதிய 2470/ 04ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டளை 2026.05.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் ஊடாக குற்றவியல் கருமங்களில் இருதரப்பும் பரஸ்பர நீதி ஒத்துழைப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, பயங்கரவாதத்துடன் தொடர்பான குற்றங்கள், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதற்காக உள்ள நிதிகளைச் குற்றச் செயல்களின் வரும்படிகள் மற்றும் சாதனங்களையும் கண்டறிதல், தடை செய்தல், இழப்பித்தல் மற்றும் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்தல், புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான குற்றவியல் கருமங்களில் ஒத்துழைப்பதன் ஊடாகவும் பரஸ்பர சட்ட உதவியளிப்பதன் ஊடாகவும் பொருத்தனையின் இரு திறத்தவர்களின் பங்கும் மேம்படுத்தப்பட்ட பயனுறுதியுடன் சம்பந்தப்பட்டதாகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

”பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம்”-ஹர்ஷன நாணயக்கார

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் பலி!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் இளைஞன் கடத்தி சித்திரவதை – ஐவர் கைது!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube