Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன!

வைகாசி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (29) வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை மன்றம் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (29) இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

அரச பல்கலைக்கழகங்கள் மூலம் செவிலியர் பட்டப் படிப்பை நிறைவு செய்த, நாடளாவிய ரீதியிலுள்ள 31 அரச வைத்தியசாலைகளில் 6 மாத கால ஒழுங்கமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கே இவ்வாறு தரம் மூன்று செவிலியர் உத்தியோகத்தர்களாக நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள தேசிய, போதனா மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையில் இவர்கள் பணி அமர்த்தப்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, 2025 – 2029 ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் செவிலியர் சேவைக்கு புதிதாக 13,600 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இன்று வழங்கப்பட்ட 515 நியமனங்களுடன் அந்த இலக்கின் 30 வீதம் பூர்த்தியடைந்துள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ள மேலும் 2,867 நியமனங்களுடன் இவ்வருட இறுதிக்குள் 50 வீத இலக்கு எட்டப்பட உள்ளது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய சட்டவிரோத மீன்பிடிக் கப்பல்களின் அத்துமீறல்களுக்கு எதிராக கடலில் படகு ஊர்வலம்!

ஆடி 29, 2026
இலங்கைவானிலை

பலத்த மழை எச்சரிக்கை!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீக்கு அதிகளவான பலத்த மழை

புரட்டாதி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube