Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி!

வைகாசி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்துக்கும் தலைநகர் காபூலுக்கும் இடையிலான வீதியில் 50க்கு மேற்பட்டோரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் 10 சிறுவர்கள், 5 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் 29 பேர் இவ்விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தங்குவதற்கு பாகிஸ்தானில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் உடைமைகளுடன் லொறிகளின் ஊடாக பயணத்தை மேற்கொண்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுகின்றனர். அவ்வாறு பயணித்த லொறியொன்றே விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 447,400 ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு இலட்சம் வாகனப் பதிவுத் தகடுகள் குவிந்து கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயல் பாதிப்பு: மட்டக்களப்பு மீன் வளர்ப்பாளர்களுக்கு ரூ.16 மில்லியன் நிதியுதவி

ஆவணி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வரதட்சிணை கொடுமை! 3-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube