Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறைவுக்கு வரும் சிவனொளிபாதமலை புனித யாத்திரைக் காலம்!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இவ்வருடத்திற்கான (2026) சிவனொளிபாதமலை புனித யாத்திரைக் காலம் நேற்று சனிக்கிழமை (30) நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக சிவனொளிபாதமலை இராஜமஹா விகாரையின் ஸ்ரீபாதஸ்தானாதிபதி வண. பெங்கமுவே தம்மதின்ன தேர் அறிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி புண்ணிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சிவனொளிபாதமலை உடமழுவவில் தொடர்ச்சியான விசேட மத வழிபாடுகள் மற்றும் பூசைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

உடமழுவவில் நடைபெற்ற இறுதி மத வழிபாட்டுச் சடங்குகளைத் தொடர்ந்து, புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியன, நான்கு வெவ்வேறு வீதிகள் ஊடாக பெல்மடுல்ல, கல்பொத்தவெல சிவனொளிபாதமலை இராஜமஹா விகாரைக்கு நேற்று நள்ளிரவு விசேட ஊர்வலம் மூலம் முறைப்படி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இரத்தினபுரி வீதி வழியாக பயணித்த பிரதான வண்ணமயமான ஊர்வலம், சிவனொளிபாதமலை உடமழுவவிலிருந்து புறப்பட்டு இன்று (31) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கல்பொத்தவெலவில் உள்ள சிவனொளிபாதமலை இராஜமஹா விகாரையை சென்றடைந்துள்ளது.

புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டுக்கான புதிய சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பமாகும் வரை கல்பொத்தவெல விகாரையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப்படும் என வணக்கத்திற்குரிய தம்மதின்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கடந்த பல மாதங்களாக நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த இந்த ஆண்டிற்கான சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் பக்திப்பரவசத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 நிதி நிறுவனங்களை முடக்கிய மத்திய வங்கி

புரட்டாதி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் அமித் சத்துரங்க சமரநாயக்க கைது!

ஆடி 12, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் இல்லை!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube