Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

2ஆவது முறையாக கிண்ணத்தை தன்வசப்படுத்திக்கொண்டது ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் !

ஆனி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டுக்கான IPL கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஹ்மதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பில் வொஷிங்டன் சுந்தர் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் சார்பில் ரசிக் சலாம் தார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தநிலையில் 156 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி 75 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2ஆவது முறையாக கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube