Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திஸ்ஸமஹாராம – கிரிந்த வீதியின் மகாஜன சந்திக்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திஸ்ஸமஹாராம நோக்கி பயணித்த கேப் ரக வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, கடையொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த கேப் ரக வாகனத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த மூவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹொரனை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வனாத்தவில்லு, மைலங்குளம் விகாரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் இடதுபுறமிருந்த கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சாரதி உழவு இயந்திரத்தின் கீழ் சிக்குண்டுள்ளார். விபத்தில் காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வனாத்தவில்லு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ஜனாதிபதி அனுர!

வைகாசி 23, 2026
இலங்கை

குருநாகல் திறந்த பல்கலைக்கழக கிளை வசதிகள் குறித்து பிரதமர் கலந்துரையாடல்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறை கைதியுடன் 53 தடவைகள் தொலைபேசி உரையாடல் – சிக்கினார் முஜிபுர் ரஹ்மான்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube