Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் குழந்தைகள், சிறுவர்களின் என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று (15) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 25ஆவது நாள் பணிகள் நேற்றைய தினம் (15) முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, புதிதாக மேலும் 5 மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஏற்கனவே வெளிப்பட்டிருந்த என்புக்கூடுகளில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 பேரினது என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட மனித என்புக்கூடுகளில் பெரும்பாலானவை உடைந்த நிலையிலும், சீரற்ற முறையிலுமே காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 360 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 351 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

பிரித்தானியப் பிரதமர் தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக ‘தி அப்சர்வர்’ நாளிதழ் தெரிவித்துள்ளது!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணில் சஜித் இரகசிய சந்திப்பு!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

19 கோடி ரூபாய் பெறுமதியான போலி டொலர்களுடன் பெண்ணொருவர் கைது!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube