Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் பலி!

ஆனி 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று (15) இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, மாத்தளை, வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் கேபிள் கம்பி ஒன்று இழுக்கப்பட்டிருந்தது. இதன்போது, வெஹிகல திசையிலிருந்து கடுவலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த கேபிளில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த அவரது 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் வெஹிகல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய ட்ரக் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற லொறியின் உரிமையாளர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மீரிகம – நால வீதியின் ஹகுருகும்புக பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நால நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடது பக்கமாக நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தெல்விட்ட – கிரிபத்கல்ல வீதியின் கொடமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரிபத்கல்ல திசையிலிருந்து தெல்விட்ட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில், காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனரும், அதன் பின்னால் பயணித்த இரண்டு பெண்களும் தெல்விட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெல்விட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா’ புயல் சேதம்: அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணை!

ஆடி 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ராகுல் காந்தி கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube