பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் நானு ஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியாளர் தனுஷ்கா ஆகியோரின் தலையில் குறித்த ஆரம்ப நிகழ்வு சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டிட்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக ரயில் மார்க்கம் ரயில்வே திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீண்டும் புத்துயிர் பெற்று பயணிகளின் நலன் கருதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
