Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச வழக்கில் கைது!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய குறித்த அதிகாரி, வர்த்தகர் ஒருவரின் வாகனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யாமல் இருப்பதற்காக, 10 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முறைப்பாட்டாளரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் அவர், மீதமிருந்த 9 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொள்ள களுத்துறையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏற்றுமதிக்கு பாதிப்பு? இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து உண்மையை சொல்வது நல்லது – நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மாலுமிகளை விடுவிக்க ஈரான் இணக்கம்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் – தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube