Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது!

ஆனி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026ஆம் ஆண்டு நெல்லுக்கான கேள்வி 2.8 மில்லியன் மெற்றிக் டொன்னாக காணப்படுகின்ற நிலையில் 2.85 மில்லியன் மெற்றிக் டொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் போதுமான நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட நிலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே 2026ஆம் ஆண்டு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (24) நடைபெற்ற அமர்வில் கடந்த மாதம் 6ஆம் திகதி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025 (2026)ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்தில் 2.8 மில்லியன் மெற்றிக் டொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு நெல்லுக்கான கேள்வி 2.8 மில்லியன் மெற்றிக்டொன்னாக காணப்படுகின்ற நிலையில் 2.85 மில்லியன் மெற்றிக் டொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் போதுமான நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட நிலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே 2026ஆம் ஆண்டு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது.

தற்போதைய விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரத்தை கமநல அபிவிருத்தி மத்திய நிலையம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருசில பகுதிகளில் உர விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. அவற்றுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க நிறுவன மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு அமைய விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

அரசியலில் களம்இறங்கும் ராகவா லாரன்ஸ்

ஆனி 12, 2026
இலங்கை

சைபர் குற்றவாளிகளால் கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணை – பிரதமர் ஹரினி அமரசூரிய!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதல் BESS உபகரணம் கிளிநொச்சி வந்தது!

ஆனி 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக ஒரு ‘சீட்’ கூட பெறாத 8 மாவட்டங்கள்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube