Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் – புதிய டெங்கு வைரஸ் பரவலே காரணம்!

ஆனி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புதிய டெங்கு வைரஸ் ஒன்று பரவி வருவதன் காரணமாகவே நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிய வைரஸ் தாக்கத்தினால் டெங்கு பரவல் அதிகரித்த போதிலும், நாம் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம். தற்போது அதன் பரவலில் ஓரளவுக்குக் குறைவு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டமே டெங்குவினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகரகம மற்றும் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் இதன் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது.

வீடுகளை விடவும் பொது இடங்கள், குறிப்பாக பாடசாலைகள், அலுவலக வளாகங்கள் மற்றும் பாழடைந்த வெற்று நிலங்களில் டெங்கு நுளம்புப் பெருகும் இடங்கள் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அந்த வெற்று நிலங்களில் ஏதேனும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செல்லும்போது அதன் உரிமையாளர்கள் உரிமை கோரி வருகின்றனர்.

அத்துடன், கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலும் டெங்கு நுளம்புப் பெருக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இன்றைய தினத்திலும் (27) நாட்டின் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது, சில அரச நிறுவன வளாகங்களுக்குள் நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓகஸ்ட் மாத லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம்?

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனி புள்ளிகள் அடிப்படையில் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் மாத அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கான அழைப்பு – மனுவல் உதயச்சந்திரா

ஆவணி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube