இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க லண்டனில் மணிக்கட்டு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக அவரது முகாமையாளர் அசங்க விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (03) நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நிஸ்ஸங்க தற்போது சிகிச்சைக்குப் பிந்தைய மீட்பு கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைய அவருக்கு சுமார் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அறுவைச் சிகிச்சை லண்டனிலுள்ள சாரம் ரோடு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
காயம் காரணமாக இவ்வாண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்குள் உடற்தகுதியை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகிச்சை மற்றும் மீட்பு காலத்தில் இலங்கை அணியின் வைத்தியர் டமிந்த அத்தநாயக்க லண்டனில் நிஸ்ஸங்கவுடன் இணைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
