கொழும்பில் நடைபெற்ற 50ஆவது தேசிய மகா விளையாட்டு விழா – 2026 நடைப்போட்டியில், ஊவா மாகாணத்தின் ஆர்.எம்.டி. ருக்மால் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் பிரிவில் தெற்கு மாகாணத்தின் யூ.வி. கல்ஹாரி மதிரிகா முதலிடம் பெற்றார். அவரைத் தொடர்ந்து டி.வி. ஹஷினி லக்ஷானி மற்றும் பி.பி. கயானி முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் தெற்கு மாகாண அணி குழு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

