திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘டிராக் 6’ (TRACK 6) பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(06) காலை 6.00 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது, இவ்விபத்து குறித்து மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
