Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர்

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர்  இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுவரப்பட்டு ஒப்படைத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்குள் இடம் பெற்ற மோதலையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் 5 பேர் உட்பட 27 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த 60 கைதிகளை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து  சிறைச்சாலை பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை 400 கைதிகள் பராமரிக்க கூடிய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 960 கைதிகள் பல இடநெருக்கடிகளுக்குள் இருந்து வரும் நிலையில் மேலும் நீர்கொழும்பு சிறையில் இருந்து 60 கைதிகள் கொண்டு வரப்பட்டதையடுத்து  1020 கைதிகள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அதேவேளை பொலன்னறுவை சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் 63 கைதிகள் அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மெனின்ஜைடிஸ் மூளைகாய்ச்சலினால் 203 பேர் பாதிப்பு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி கண்காணிப்பு தீவிரம்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

OMP அலுவலகம் சர்வதேச வழிகாட்டல்களுடனேயே செயற்படுகிறது

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கு நிதியுதவியுடன் கூடிய விசாரணை

புரட்டாதி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube